
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது உறுப்பினர் ஒருவர் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் வழங்கினார். அவர் கூறும் போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 18,09,607 புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்ததில் 1,67,795 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.
மொத்தமாக 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து முழு மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளில் புகார் பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் இருக்கிறது. மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.