தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பாடத்திட்டங்களுடன் கூடுதலாக உயர் கல்விக்கு பயன்பெறும் விதமாக பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு மற்றும் மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்பு ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்குவது மட்டுமல்லாமல் ஊக்கத்தொகை அல்லது உயர்கல்வியில் முன்னுரிமை வழங்கப்படலாம் என கல்வியாளர்கள் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதன்படி மாணவர்களுக்கு பொதுஅறிவு மற்றும் நாளிதழ் வாசிப்புக்கு ஊக்கத்தொகை வழங்கினால் அதன் மேல் இருக்கும் ஆர்வம் பெருகி உயர்கல்வி அல்லது வேலை வாய்ப்புகளுக்கு மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

அவ்வகையில் ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் ஒவ்வொரு மாதமும் 10 மதிப்பெண்களுக்கு முதல்வர் நாளிதழ் வாசிப்பு திறனறித் தேர்வு என்ற பெயரில் தேர்வு வைத்து 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அல்லது உயர்கல்வியில் முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் விரைவில் அமலாகும் என தகவல் வெளியாகி உள்ளது.