தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லேர்னிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி 323 கோடி ஸ்டார் 3.0 மென்பொருளை தயாரித்து அடுத்த ஆண்டில் அமல்படுத்தும் பணிக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.