மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாளை ஆடிகிருத்திகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக ஆடி கிருத்திகை அன்று திருத்தணி முருகன் கோவிலில் கூடுதல் விசேஷம் என்பதனால் திருத்தணிக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.