நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திறன் போட்டிகளை நடத்துவதற்கும், அதற்குரிய வழிமுறைகளையும் தமிழக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி 5 முதல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் வயது வாரியாக மூன்று பிரிவினராக பிரிக்கப்பட்டு பரதநாட்டியம், கிராமிய நடனம், குரல், இசை மற்றும் ஓவியம் ஆகிய நான்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இப் போட்டிகளில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றவர்களை மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. மேலும், 5 முதல் 8, 9 முதல்  12, 13 முதல்  16 ஆகிய மூன்று பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் போட்டிகளுக்கான விதிமுறைகள் மற்றும் நாள், நேரம், பங்கேற்கும் வழிமுறைகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை 044-28192152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.