தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகள் அனைத்திலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை அரசு செய்து வருகின்றது.அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் பல நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது டிஜிட்டல் உலகில் தயக்கம் இன்றி பிரிந்து அறிந்து படிக்க வேண்டும் என கூறினார். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல திறன் மிக்க மாணவர்களை உருவாக்குவதற்காக என்று அவர் கூறியுள்ளார்.