தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்திற்கு கட்டாயமாக தகுதி தேர்வு அவசியமென மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் கட்டாயமாக டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் தொடர்ந்து பணியில் நீடிக்கலாம் எனவும் ஆனால் பதவி உயர்வு வழங்கப்படாது எனவும் உயர்நீதிமன்றம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

இதனால் 2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் அரசு பணியில் சேர்ந்து பதவி உயர்விற்காக காத்திருந்து ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. மேலும் பனி மூப்பு மற்றும் பணி முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.