தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காவிரி டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். விவசாயிகளின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக திமுக அரசு செயல்படும். மேலும் தமிழக முழுவதும் விரைவில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக அறிவித்துள்ளார்.

டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்த அவர், வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை,தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் பிற மாநிலங்களில் மின் கட்டணம் அதிகம் என்று கூறியுள்ளார்.