தமிழகத்தில் மது கடைகள் மூலமாக அரசுக்கு அதிக வருமானம் வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் அரசுக்கு சொந்தமான மது கடைகள் ஏராளமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் மது கடைகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுகிறது. இதன் காரணமாக மது பாட்டில்கள் வாங்கிய பிறகு பில் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக முதல் கட்டமாக மது கடைகளில் 12,000 பில்லிங் மெஷின் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டாஸ்மாக் கணக்குகளை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் மதுபானங்கள் வாங்கிய பிறகு பில் கொடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்படுவதால் இனி மது கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை தீபாவளி பண்டிகைக்கு பிறகு அனைத்து கடைகளிலும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.