முக்கிய விழாக்கள் மற்றும் குறிப்பிட்ட ஊர்களில் நடத்தப்படும் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்தது. இந்த நிலையில் ஜூன் 29ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு 29ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவு பிறப்பித்தார். மேலும் 29ம் தேதிக்கு பதிலாக ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்துள்ளார்.