தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட வரும் நிலையில் சமீபத்தில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் வருகின்ற ஜூன் 1 முதல் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் 175 சிறப்பு பள்ளிகளில் 5,725 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு சத்துணவு மையத்திலிருந்து உரிய நேரத்தில் மதிய உணவு கொண்டு சென்று வழங்கவும் இதற்கான பொறுப்பாளர்களை சம்பந்தப்பட்ட துறை மூலமாக நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.