தமிழகத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெறுப்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளது.

இது போதுமானதாக இல்லை. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த நெற்பயிர்கள் மற்றும் உளுந்து பயிர்களுக்கு விவசாயிகள் போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு நிவாரணத்தொகை இருக்கிறது. எனவே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக வலியுறுத்திக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.