தமிழக அரசு பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாகவும் பெண்கள் உயர் கல்விக்கு உதவும் விதமாகவும் புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், 1,16,342 பெண்கள் பயனடைந்து வருவதாக அரசு அறிவித்தது.

அதோடு இடை நின்ற 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயர்கல்வி பயில்வதாகவும் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று பட்டபிராமில் உள்ள இந்து கல்லூரியில் தொடங்கி வைக்கிறார். மேலும் இதன் மூலம் 1,04,347 மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.