
தமிழகத்தில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 11ஆம் தேதி அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள நிலையில் அன்றைய தினம் சட்டவிரோதமாக மது கடைகளை திறந்தாலோ அல்லது மதுபானங்களை விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறதாம். மேலும் ஏற்கனவே செப்டம்பர் 11ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.