
தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் சமீப காலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சென்னை கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய கமிஷனர் ஆக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் சென்னை கமிஷனர் ஆக பொறுப்பேற்ற நிலையில் இதுவரை 3 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்பந்தம் உடைய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில் நேற்று ரவுடி சீசிங் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில் அவரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோன்று சமீபத்தில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியான நிலையில் தற்போது சென்னை கமிஷனர் ஆக அருண் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து ரவுடிகள் மீது என்கவுண்டர் நடவடிக்கைகள் பாய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.