
தமிழகத்தில் கடந்த ஜூன் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குருவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. வருகின்ற ஜூன் 24ஆம் தேதி முதல் குறுவை பருவத்துக்கான விவசாயிகள் பதிவு ,தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மேற்கொள்ள நடவடிக்கை மேலும் பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமியம் தொகையாக 721.24 ரூபாய் விவசாயிகள் செலுத்த வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.