பரவி வரும் கன்றுவீச்சு நோய் (Brucellosis) கால்நடைகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்துவதால், தமிழக அரசு கால்நடைத் துறையினர் இந்த நோயை தடுக்க இலவச தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்த நோயால் கால்நடைகளுக்கு  பாதிப்புகள் ஏற்படும் என்பதால், பாதுகாப்பான முறையில் இந்த நோயை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

இந்த தடுப்பூசி முகாம் கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இது வரும் 15 ஆம் தேதி வரை தொடர உள்ளது. அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் கிடேரி கன்றுகளுக்கு இந்த தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை போட்டு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வேண்டியது அவசியமாகும்.