தமிழகம் முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 3000-க்கும்  மேற்பட்ட அரசு பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சரியான நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சரியான முறையில் காலை உணவு தயாராக இருக்கிறதா என்பதை காலை 7 மணிக்கு பள்ளி ஆசிரியர்கள் வந்து பார்வையிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும்   திட்டம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும் ஆசிரியர்களையும் இந்த திட்டத்தில் புகுத்துவது ஏற்புடையது அல்ல என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை கண்காணிக்கும் அனைத்து பணிகளையும் சத்துணவு அமைப்பாளர்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு இந்த பொறுப்பை வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.