நாட்டில் தற்போது வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் காற்று அதிகமான அளவு மாசடைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை காற்றை மிகுந்த அளவு மாசுபடுத்துகின்றது. இதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு காலாவதி வாகன சட்டத்தை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த உள்ளது. தமிழகத்திலும் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இப்படியான நிலையில் மத்திய அரசின் காலாவதி வாகன சட்டம் அமலுக்கு வந்தால் வாகன உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படக்கூடும். அது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களில் உள்ள பழைய வாகனங்களை அழித்துவிட்டு புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்பதால் அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் காலாவதி வாகன சட்டம் தொடர்பாக தமிழக அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.