தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 67.75 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து மொத்தம் 67,75,250 பேர் காத்திருப்பதாகவும் அவர்களில் ஆண்கள் 36,14,327, பெண்கள் 31,60,648, மூன்றாம் பாலினத்தவர் 275 என அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். ஒட்டுமொத்த பதிவு தாளர்களில் ஒரு லட்சத்து 43,396 மாற்றுத்திறனாளிகளும் இடம்பெற்றுள்ளனர். அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளி விவரப்பட்டியல் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.