இன்றைய காலகட்டத்தில் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை அந்த வகையில் சென்னையில் அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இதன் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் ஆனது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மூன்று வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டத்தில் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனமானது ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் உற்பத்தியை முடித்துள்ளது. இதற்கான முதல் சோதனை ஓட்டமானது இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லியில் இருந்து முல்லை தோட்டம் வரை 2.5 கிலோமீட்டர் தொலைவிற்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.