தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே தாழ் தளபேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.