இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் துணை ஆகிய இரு நகரங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றன. ஆனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் சரிசமமாக நல்ல வளர்ச்சியை பெற்று வரும் நிலையில் குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மற்றும் மருத்துவத்துறையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பாக துறைச் சார்ந்த முன்னேற்றத்திற்கு ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராத நேரத்தில் இந்த துறை ரீதியான கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்