
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது என தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு குழு அறிவித்துள்ளது. தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியான நிலையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் இட ஒதுக்கீட்டில் 6326 எம்பிபிஎஸ் இடங்களும், 1768 பல் மருத்துவ இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.