தமிழகத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை தமிழக மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவ மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களை பார்வையிட 4235 பறக்கும் படை குழுக்கள் முதன்மை கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையத்திற்குள் தேர்வர்களும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் கைபேசி வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவர்கள் தேர்வு கூட அனுமதிச்சீட்டில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். தேர்வில் மாணவர்கள் ஒருங்கிணை செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு கட்டுப்பாட்டு அறையில் பொது தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள்,பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் கருத்துக்களை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு 9498383081, 9498383075 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும்.