
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் 4 வட்டங்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அதன்படி குன்னூர், உதகை, குந்தா மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.