ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்திரகோசமங்கை கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதே நேரத்தில் மாணவர்களுக்கு பொதுத்தேர்கள் நடைபெறுவதாக இருந்தால் அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக அடுத்த மாதம் 10-ம் தேதி வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.