தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் மூலம் மாதம்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதாவது மாதந்தோறும் 2-வது மற்றும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில் இதில் படித்த பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.