விவசாயிகள் உரங்களை வாங்கும் போது, அதனுடன் பிற இடுபொருட்களையும் கட்டாயப்படுத்தி வாங்கச் செய்யக் கூடாது என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எச்சரித்துள்ளார்.

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறி உரங்களை பதுக்கி வைத்தால் அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உர விற்பனையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதையும், விவசாயிகள் சிரமமின்றி உரங்களை பெற அரசு தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.