தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களின் விவரங்களை ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்களாக நன்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவை வழங்கப்படுகிறது. ஆனால் இவை உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என புகார் இணைந்துள்ளது.

இந்நிலையில் ஓய்வு கால பலன்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் குறைபாடுகளை ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு கால பலன்கள் தொடர்பான விவரத்தை மாதாந்திர அறிக்கையாக ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதாவது ஓய்வு பெற்ற பணியாளர்களிடமிருந்து 16 வகையான விவரங்களை பட்டியலிட்டு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.