தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏராளமான விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொது தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சனிக்கிழமைகளை பள்ளிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி சுமையை குறைப்பதற்காக அனைத்து வார இறுதியில் சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிகள் விடுமுறை நாளாக இருக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விடுமுறைகள் மற்றும் உள்ளூர் விடுமுறை தினங்களை ஈடு செய்ய அந்தந்த மாவட்ட வாரியாக சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், திருவண்ணாமலை மாவட்ட கல்வி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளும் பிப்ரவரி 3ஆம் தேதி இன்று  சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக இருக்கும். தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு நாளை நடைபெறும் நிலையில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வர சம்பந்தமாக பள்ளி தலைமை ஆசிரியைகள் மற்றும் பொறுப்பு  ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது