தமிழகத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகையை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றின் கீழ் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையை 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கிட சமீபத்தில் அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகை பயனாளிகளுக்கு கிடைக்கும் எனவும் இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டால் அதற்கான பரிந்துரைகளை அனுப்பும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.