
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS (technology education and learning support) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இது செயல்படுத்தப்பட்டு அதன் பிறகு 100 பள்ளிகளுக்கு இதை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு இதனை கற்பிக்க ஆசிரியர்களுக்கும் C++, python பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.