தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் இடையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்குவதை அரசு நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

நிதித்துறை நிதி ஒதுக்கீடு செய்ய தாமதிப்பதே இதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி இவற்றை ரேஷனில் வழங்குவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகின்றது. விநியோகம் நிறுத்தப்படும் பட்சத்தில் வெளிச்சந்தையில் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.