நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் JEE நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 26 முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பள்ளிகளில் பயிற்சி நடைபெறும் நாட்களில் ஒரு ஆசிரியர் வீதம் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

அவ்வாறு பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் பணி செய்வதை இது செய்வதற்கான விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை முதல் 5 நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் குறித்த அறிமுக பயிற்சிகள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து ஜனவரி 2 முதல் மேற்கண்ட பாடங்கள் குறித்து தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.