தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் நாளே பாட புத்தகங்கள் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் செல்வதை மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்து வருகிறார்கள்.

1 முதல் 7 ஆம் வகுப்பு வரை முதல் பருவ பாட புத்தகங்கள் மட்டும் அச்சிடப்பட்டு இருப்பதாகவும் மற்ற வகுப்புகளுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் விற்பனைக்கு பாட புத்தகங்கள் வாங்குவோர் பள்ளி கல்வித்துறையின் டிபிஐ வளாகம் கோட்டூர் புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 10ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.