தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மீனவர்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழகத்தில் அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண உதவித்தொகை முதல்வர் அறிவுரைப்படி உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சரின் அறிவுரையின்படி டீசல் மானியத்தையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும், வாக்கி டாக்கி வழியே 80 கி.மீ., சுற்றளவு துாரத்தில் இருந்த மீனவர்களை எளிதாக தொடர்பு கொள்ளலாம். இதையடுத்து அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்க உலக வங்கியிடம் 62.14 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.