தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது பழைய திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன்,அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய நிதி அமைச்சர் ஆக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் தென்னரசு, பழைய ஓய்வு திட்டம் குறித்து கேள்வி கேட்டபோது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும் மாநில அரசு ஊழியர்களின் நலனில் அரசு எப்போதும் கவனமாக இருக்கிறது. அதனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை விரைவில் எடுப்போம் என்று உறுதியளித்துள்ளார்.