நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் 2000 நோட்டு வாங்குவது சம்மந்தமாக பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னதாக, அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் 2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு நெல்லை அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியிருந்த நிலையில் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் 2,000 நோட்டுகள் வாங்கப்படும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.