தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை கூடுதலாக இருந்தால் அவர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை இயக்குனர் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதன்படி நடப்பு கல்வியாண்டில் அரசு நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அதிகமாக இருப்பது தெரிய வந்தால் பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் கடைசியாக பணியில் சேர்ந்த ஆசிரியரை பட்டியலில் சேர்த்து விட வேண்டும் எனவும் ஒரு முறை பணி நிறைவு செய்து விட்டால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணி நிறைவு செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.