தமிழகத்தில் அடிக்கடி பெய்து வரும் கனமழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழகத்தில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல்  உறுதி  செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் டெங்கு பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீடுகளை சுற்றி குப்பைகள் சேர்ந்து கொள்ளாமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் பிடித்து வைத்தால் அதை மூடி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீப நாட்களாகவே பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.