தமிழகத்தில் கொடூரமாக வெயில் கொளுத்தி மக்களை வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய இருக்கிறது.