தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் கூட்டணி வைத்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பின் விஜய்யை வைத்து 3 படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் ஆனார்.

தற்போது, அவர் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனிடையே, கடந்த 2014ல் சின்னத்திரை நடிகை ப்ரியாவை திருமணம் செய்த இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தைக்கு ‘மீர்’ என பெயர் வைத்துள்ளதாக இத்தம்பதி இன்று அறிவித்துள்ளனர்.