தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது நாளை (மே 8) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கே நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 8 அல்லது 9ஆம் தேதி இது புயலாக வலுபெற இருக்கிறது.

இந்த புயல் மேலும் தீவிரமடைந்து மத்திய வங்கக்கடல் பகுதி நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறினார். நடப்பு ஆண்டில் முதலாவதாக உருவாகும் இந்த புயலுக்கு யேமன் நாடு அளித்த “மோக்கா” என பெயா் சூட்டப்படுகிறது.