
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று தற்போது சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் அதிகமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு வடகிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த புயல் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் இன்று மாலை கரையை கடக்க இருக்கிறது. சென்னையில் இன்று காலை 8:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் பகுதியில் பத்து சென்டிமீட்டர் மழையும் மீனம்பாக்கத்தில் 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த புயல் கரையை கடப்பது கிட்டத்தட்ட 3 மணி நேர நிகழ்வாக இருக்கும். மேலும் புயல் கரையைக் கடக்க இருப்பதால் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.