வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு சென்னை மற்றும் திருவள்ளுவர் உள்ளிட்ட ‌5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 16ஆம் தேதி 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 18ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.