மதுரை கே.புதூரை சேர்ந்த தம்பதிகள் பாலாஜி மற்றும் ரம்யா. இவர்களில் பாலாஜி மதுரை உலகமேரி கிளையில் ஓட்டுனராக வேலை பார்த்தவர். இவர் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. குழந்தைகளுடன் செய்வது அறியாது தவித்த நிலையில் கருணை அடிப்படையில் போக்குவரத்துக் கழகத்தில் தனக்கு வேலை தருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு ரம்யா மனு கொடுத்துள்ளார்.

இந்த மனுவை பரிசீலித்த அரசு அவருடைய கணவர் பணியாற்றிய போக்குவரத்துக்கு வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்தில் ரம்யாவுக்கு நடத்துனர் பணி வழங்கியுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுப் போக்குவரத்து கழகதின் முதல் பெண் கண்டக்டர் என்ற பெருமையையும் ரம்யா பெற்றுள்ளார்.