தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மெகா திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமையப்போவதாக ‘காமக்ய அனலிட்டிக்ஸ்’ (Kamakhya Analytics) வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் அதிரவைத்துள்ளன.
இந்தக் கணிப்பின்படி, தமிழகத்தின் பிரதான சக்திகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளுக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காது எனத் தெரியவந்துள்ளது.
திமுக கூட்டணி 78 முதல் 95 இடங்களைப் பெற்று முதலிடம் பிடித்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் திணறும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், அதிமுக கூட்டணி 68 முதல் 84 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத மாபெரும் ஆச்சரியமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சுமார் 25 முதல் 31 சதவீத வாக்குகளை அள்ளி, 67 முதல் 81 தொகுதிகளைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
Cinema, caste, and coalition — Tamil Nadu politics has it all.
A three-way fight, razor-thin margins, and 234 seats that could go either way. Here’s what our Exit Poll says.⁰#KamakhyaAnalytics #TamilNaduElections #ExitPoll2026 #TamilNaduVotes #TNPolitics pic.twitter.com/VitFMhZ6Ud
— Kamakhya Analytics (@kamakhya_X) April 29, 2026
“>
இதன் மூலம், தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ‘கிங்மேக்கராக’ விஜய் உருவெடுப்பார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
