உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டை கடக்க உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள இருந்தார். அதில் அவர் முதலில் குழந்தைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அமெரிக்க அதிபர் முதலில் உக்ரைன் தலைநகரான கீவிற்கு சென்றுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைய உள்ளதால் அவர் சென்றுள்ளார்” என கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் தலைநகர் கீவில் உக்ரைன் அதிபரும் அமெரிக்க அதிபரும் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைநகர் கீவிற்கு சென்றிருப்பது ரஷ்யாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும்” என அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது” உக்ரைன் பலவீனமாக உள்ளது. மேலும் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் பிரிந்து கிடக்கின்றன என்று நினைத்து ரஷ்யா அதிபர் புதின் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளார். ஆனால் அவர் தப்பு கணக்கு போட்டுவிட்டார்” என்று கூறியுள்ளார்.