
டெல்லியை சேர்ந்த ஆஷிப் என்ற 24 வயது இளைஞர் தனது பைக்கில் தனித்துவமான சைலன்சர் ஒன்றை பொருத்தியுள்ளார். இதனால் அவர் சாலையில் சென்ற போது ஒலி மாசு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி காவல்துறையினர் அவரை வழிமறித்து விசாரித்தனர். அப்போது ஆசிப் தனது தந்தை வந்து இந்த பிரச்சனையை சரி செய்வார் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
அதேபோன்று ஆஷிபின் தந்தையான ரியாசுதீன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் தந்தை மகன் என இருவரும் சேர்ந்து போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இரண்டு போலீசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆசிப் மற்றும் அவரது தந்தை ரியாசுதீன் கைது செய்யப்பட்டுள்ளனர்.